உறவும் உணர்வும்
உன்னை பிரிந்திட எனக்கும், என்னைப் பிரிந்திட உனக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்தன நம்மிடம். ஆனால் அவையெல்லாம் நமக்குள்ளான சண்டையின்பொழுது பயன்பட்டனவே ஒழிய பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை... பெரியதாக செய்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுதான். ஆனால் பலனில்லை, அது வெறும் எதிர்பார்ப்புதான் வேண்டுதல் இல்லை. தெரிந்தவர் தெரியாதவர் பழக்கத்தில் இருப்பவர் நேற்று கைகுலுக்கி நட்பானவர் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இருக்கும் குடி நண்பர்கள் என்று இருக்கும் என் பட்டாளத்தை விட்டுவிட்டு உனக்காக, உன் ஒருத்திக்காக மட்டுமே வாழ்ந்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இன்று உனக்காக அவர்களை விட்டு விட்டு உன் கண்ணிலும் படாமல் எங்கேயாவது சென்று விடலாம் என்றே தோன்றுகிறது. இதோ இங்கே என்முன் இருக்கும் சன்னலின் வெளியே இருக்கும் தூசு துப்பைகளின் மத்தியில் அவனின் பந்துவிளையாட்டு மட்டுமே முக்கியம் என்றிருக்கும் அந்தச் சிறுவனைப்போலவே இருந்தேன். இப்பொழுது அதுபோலவே இருக்க ஆசைப்படுகிறேன். இந்த மாற்றம் எதனாலென்றால் உன்னாலென்று ஒரே வரியில் சொல்லிவிட முடிகிறது என்னால்! ஏன்? தெரியாது. "என்ன வேடிக்கை பார்த்துக் கொண்ட...