Posts

உறவும் உணர்வும்

உன்னை பிரிந்திட எனக்கும், என்னைப் பிரிந்திட உனக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்தன நம்மிடம். ஆனால் அவையெல்லாம் நமக்குள்ளான சண்டையின்பொழுது பயன்பட்டனவே ஒழிய பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை... பெரியதாக செய்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுதான். ஆனால் பலனில்லை, அது வெறும் எதிர்பார்ப்புதான் வேண்டுதல் இல்லை. தெரிந்தவர் தெரியாதவர் பழக்கத்தில் இருப்பவர் நேற்று கைகுலுக்கி நட்பானவர் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இருக்கும் குடி நண்பர்கள் என்று இருக்கும் என் பட்டாளத்தை விட்டுவிட்டு உனக்காக, உன் ஒருத்திக்காக மட்டுமே வாழ்ந்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இன்று உனக்காக அவர்களை விட்டு விட்டு உன் கண்ணிலும் படாமல் எங்கேயாவது சென்று விடலாம் என்றே தோன்றுகிறது. இதோ இங்கே என்முன் இருக்கும் சன்னலின் வெளியே இருக்கும் தூசு துப்பைகளின் மத்தியில் அவனின் பந்துவிளையாட்டு மட்டுமே முக்கியம் என்றிருக்கும் அந்தச் சிறுவனைப்போலவே இருந்தேன். இப்பொழுது அதுபோலவே இருக்க ஆசைப்படுகிறேன். இந்த மாற்றம் எதனாலென்றால் உன்னாலென்று ஒரே வரியில் சொல்லிவிட முடிகிறது என்னால்! ஏன்? தெரியாது. "என்ன வேடிக்கை பார்த்துக் கொண்ட...

நினைவெல்லாம் நித்யா

நீண்ட புணர்வுக்குப்பின் சன்னல்வழி வந்த நிலவின் ஒளியில் அவளின் முகத்தைப் பார்த்தேன். அழகென்றெல்லாம் எதும் இல்லை. ஒரு பெண், அவளின் உடல், அங்கங்கள், புணர்வின் முனகல் என சிலவற்றிற்கு அடிமை நான். காதல் என்பதைத் தாண்டி ஓர்வித ஸ்பரிசம் பெண்ணுடலின் கதகதப்பு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற சராசரி ஆணின் ஆசையை முடிந்த அளவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சராசரி அல்லாததோர் ஆண்மகன். இதோ எனக்குக் கீழ் வானம் பார்க்க முயன்று என் முகத்தைப் பார்த்துப் படுத்திருக்கும் இந்த நித்யா எனது மூன்றாம் காதலி. இவள்தான் கடைசி என்று நான் எண்ணும் எந்தப் பெண்ணும் என்னிடம் இருந்துவிடுவதில்லை. முதல் இரண்டும் அப்படித்தான் ஆகிப்போனது. ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் ஆணிற்கு பெண் தருவதுவே. முடிந்தவரை அந்த எண்ணத்திலிருந்து என்னை தள்ளியே வைத்திருந்தேன், இன்று இரவும் இவளுடன் கலவியும் துவங்கும்வரை.. "ரவி, போதும்டா கிளம்புவிடு" "ஏன்?" "இல்லை, எனது அம்மா விழித்துவிட்டால்?" "வருங்கால மருமகன் என சொல்லிவிடு" "சொல்லிவிடலாம் ஆனால் எனது அம்மாவைவிட உனது அம்மாவை நினைக்கும்போ...

🔥

ஏன் தள்ளி நிற்கிறீர்கள்?  இது உங்கள் உலகம்.  வானம் நிலம் காற்று கூடவே கொஞ்சம் கடல் என நான்கும் உங்கள் வசம் இருக்கும்பொழுது, என்னைத்தொடவும் நான் உங்களைத்தொடவும் இடையில் சுவரெழுப்புபவர் யார்?  உங்களின் உரசலுக்காகத்தான் யுகமாய் காத்திருக்கிறேன். வாருங்கள் இரண்டற கலந்து காற்றில் ஒன்றாய் பறப்போம். உங்களைத் தீண்டிட துடித்துக்கொண்டிருக்கிறேன்.  குட்டியை இழந்த ஆட்டைப்போல மடிகனத்து மனம் நொந்து சுற்றிதிரிகின்றேன்,வாருங்கள். அன்றொரு நாள் என் தீண்டலில் பிரசவிக்கத் துவங்கிய உங்களது தாய் இப்பொழுது உளம்கனத்து உடலுதறிக் கொண்டிருக்கிறாள். அவளின் பாரம் தீர்த்திட என்னிடம் வாருங்கள். ஆசாபாசங்களும், அன்பு நாடகங்களும், பொய் பித்தலாட்ட வார்த்தைக் கோர்வைகளுக்கும் இடையே உடைந்த கண்ணாடித் துண்டுகளாய் சிதறிக் கிடக்கின்றீர்கள். சிதறிய உங்களுக்கு சிறகு தருகிறேன் வாருங்கள். உங்களுக்கு ருசிக்கு உணவளித்த என்னை நீங்கள் தொடவும் துணியாததேன்? வாருங்கள். நீங்கள் புகைத்த புகையிலை சுருட்டலின் நுனியிலும், நீங்கள் குளிர்காய்ந்த இரவில் கடலோர மணலிலும் நான் பல நூற்றாண்டுகளாக தனிமையில்தான் இருக்கின்றேன், வாருங்க...

அசைவம்!

சாப்பிடும்பொழுது சுவை குறைவாக இருந்தாலும் சற்றே இரத்தவாடை அடித்தாலும் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் நாம் வருத்தப்படுவதில்லை. நமக்குத்தேவை இறைச்சியிலிருக்கும் சக்தி, அவ்வளவே! எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வேட்டியாடி உண்பதென்பது மக்களின் முக்கியமாக மன்னர்களின் பெரும் பொழுதுபோக்காகவும் இன்னும் சொல்லப்போனால் வீரத்தின் அடையாளமாகவும் இருந்தது. பறையடித்து சங்கூதி மேளதாள எக்காளத்தின் இரைச்சலுக்கு மனிதர்களாகிய நாம்தான் ஆடிக் கொண்டாடுவோமேயொழிய இறைச்சியாகக் காத்திருக்கும் மிருகங்களல்ல! மனிதனைப்பார்த்து மிருகங்கள் பயந்த காலம் அது! ஈட்டி, வில் அம்பு மன்னர்கள், தளபதிகளின் ஆயுதம் மிருகமாய் கருதப்பட்ட வீரர்களின் கையில் வாள். கிட்டத்தட்ட மன்னர் காலங்களில் காலடியில் கிடக்கும் நாய்தான் போர்வீரர்கள் இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால் வேட்டைநாய்கள். அவர்களின் தலைவனின் கோரப்பசிக்காக உணவுதர, அவனின் வாழ்க்கை மேம்பட உயிர்தர தயாராய் காத்திருக்கும் ஊமை நாய்கள். வேறு எந்த தொழிலிலும் இல்லா கௌரவம் போர்வீரனாக பணியாற்றும்போது கிடைப்பதாய் நம்பவைத்து காசுக்காக அல்லாமல் கௌரவத்திற்காக அவர்களை பலி கொடுத்து அந்த உதிரத்தின...

சர்வாதிகாரம்தான் தேவை!

தலைப்பை பார்த்துவிட்டு எவனோ ஒரு முட்டாள் அவசரக்குடுக்கை அரசாங்கத்தின்மேல் கோபப்பட்டு எழுதுகிறான் என்று எண்ணிவிடாதீர்கள். உண்மையில் இப்போதைய இந்தியாவின் தேவை ஒரு கொடுங்கோலனின் சர்வாதிகார ஆட்சிதான். சுதந்திர நாட்டின் செல்லக்குழந்தைகளாய் வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் கொஞ்சம்கூட வளர்த்த இந்த இந்தியத்தாயின்மேல் அக்கறையில்லாமல். எத்தனை பேருக்குத் தெரியும் சுதந்திரம் வாங்கும் முன் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபொழுது இந்தியாவின் வளர்ச்சி வெகுவேகமாய் இருந்ததென்று? இப்பொழுது நாம் கொண்டாடும் சுதந்திர குடியரசு தினங்கள் வெறும் விடுமுறை தினமாகத்தான் போகிறது. தியாகிகளின் அத்தனை கஷ்டங்களையும் வியர்வைகளையும் சிந்திய உதிரங்களையும் இழந்த குடும்பத்து உயிர்களையும் அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறோம். மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வரும்முன் அதாவது ஆங்கிலேயர்கள் நம்நாட்டினுள் நுழைவதற்கு முன் மக்களின் எவ்வளவு உழைத்திருப்பார்கள். பல புதினங்களைப்புரட்டியிருப்பின் நிச்சயம் தெரிந்திருக்கும். நமக்குத்தான் நம் குடும்பத்தின் வரலாறே தேவையில்லையே? பிறந்துவிட்டோம் பெற்றோரின் பேச்சைக்கேட்டு படித்து வேலைக்குச்செ...

என் வாசிப்பு

வாசித்தல்தான் எத்தனை ஆத்மார்த்தமான விஷயம். வெறும் வெள்ளைக்காகிதத்தில் கொட்டப்பட்ட கறுப்பு மையாய் மட்டும் இல்லாமல் அவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்மாய் இருப்பது மாபெரும் சிறப்பு. அத்திறமை பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஓரிருவருக்கே உண்டு. சிலரின் புத்தகங்களை வாசிக்கையில் இன்னும் இதன் பக்கங்கள் நீளாதோ என்ற ஏக்கம் ஏற்படத்தான் செய்கிறது.. என்ன செய்ய? வெறும் எழுத்துகளை கொட்டி வைப்பதல்லவே புத்தகம்? கதை அக்கதை ஆரம்பிப்பதற்கான காரணம் அது எக்காரியத்தை நோக்கி நகர்கிறது என்பதைப் பொறுத்துதான் ஒரு புத்தகம் அமைகிறது. உலகின் புத்தகங்களில் அதுவும் தமிழில் மட்டும் உள்ள புத்தகங்களில் வெறும் 0.001% கூட வாசித்திராதவன் தான் வாசித்த புத்தகங்களையும் அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட தாக்கங்களையும் புலம்புகிறான் என்றேதான் எண்ணிக்கொள்ளுங்களேன். நான்.. பெயர் குறிப்பிட விரும்பாத, ஏதோ ஓர் நூலகத்தில் எந்நேரமும் குனிந்த தலையும் கூரிய பார்வையுமாய் புத்தகத் தாள்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் ஓர் வாசகன். பள்ளிக் கல்லூரிகளில் வெறும் மனப்பாடத்தின் உதவியில் அனைத்து பரீட்சைகளிலும் தேறியபின் கல்வித்துறையினால் இச்சமூகத்த...

கவலை கொல்!

நீ கவலைப்பட்டால் அதுவும் நினைவாகும் பின்னாளில் நினைத்துப்பார்த்தால் மனம் ரணமாகும். தனிமைகண்டு கவலைபடுகிறாயா? ஏன் 196 1/2 கோடி ஆண்டுகள் வெறும் கடலை வெறித்திப்பார்த்துக்கொண்டு பூமி சுழவில்லையா? உயிர்கள் தோன்றும் என்று நம்பவில்லையா? அதேபோல் உனக்காக ஒருவரேனும் தோன்றுவாரென நம்பு! தோல்விகண்டு கவலைபடுகிறாயா? முயற்சியேதும் செய்யாமல் முடங்கிக்கிடந்து புழுபுழுத்துச் சாவதைவிட ஆயிரமாயிரம் தோல்வி பெற்றாலும் முயன்றோமென சந்தோஷப்படு! முயலுடன் போட்டியிட்டால் தோற்போமென தெரிந்தும்கூட முயன்றது ஆமை தோல்வியைவிட கேவலமானது முயலாமை. காதல் தோல்வியால் கவலைபடுகிறாயா? உன்னைப்பிரிந்த ஒருத்திதானா பெண்? எத்தனயோ பெண்கள் உனக்கென தவம்கிடக்க ஒருத்திக்காக நீ ஏன் கவலையில் கிடக்கிறாய்? சந்தோஷப்பட காரணங்கள் இல்லையென்றால் அதையே காரணமாய்க் கொண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளேன். காரணமில்லா சந்தோஷங்கள்தான் நிலையாதும்கூட. - 2017 பதிவுகள் பழைய பிளாக்கை மீண்டும் பயன்படுத்த இயலாததால் இந்த புது பிளாக். பழைய பிளாக் லிங்க் இதோ -> http://manofwriting.blogspot.com/